வகுப்பை பற்றி

தமிழ் வகுப்புகளுக்கான வழிமுறைகள்

இணையவழி தமிழ் வகுப்பு Microsoft Teams என்ற மென்பொருள் வழியாக நடத்தப்படுகின்றது. இது இலவச மென்பொருளாகும். ஆசிரியர்கள் தமிழ் வகுப்பிற்குரிய நேரத்தில் மாணவனை Microsoft Teams வழியாக அழைப்பார்கள். மாணவன் அழைப்பினை ஏற்காத போது தொலைபேசி, கைபேசி அல்லது கட்செவியின் மூலம் பெற்றோருக்குத் தெரியப்படுத்துவார்கள். Microsoft Teams மென்பொருள் செயல்படாத நாடுகளில் மாற்று வழிகள் மேற்கொள்ளப்படும்.

தேவையான மென்பொருட்கள்: Adobe Acrobat, Webex

Online Tamil Class

கற்பிக்கும் முறைகள்

பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நாளில், வாரம் ஒரு வகுப்பு நடைபெறும். ஐம்பது நிமிடங்கள் கொண்டது ஒரு வகுப்பாகும். ஐம்பது நிமிடங்களில் மூன்று படிநிலைகளாகத் தமிழ் வகுப்பு நடைபெறும்.

முதல் பத்து நிமிடங்கள்

மாணவர்களை உற்சாகப்படுத்துதல், வீட்டுப்பாடங்களைச் சரிபார்த்தல், சென்ற வகுப்புப் பாடங்களை மீள்பார்வை செய்தல்.

முப்பது நிமிடங்கள்

புதிய பாடங்களை செம்மையாக நடத்துதல், மாணவர்களின் எழுத்திலும் உச்சரிப்பிலும் வாசித்தலிலும் கவனம் செலுத்துதல். நடத்தப்பட்ட பாடங்களில் வினா எழுப்புதல், மாணவனின் ஐயங்களைப் போக்குதல்.

இறுதி பத்து நிமிடங்கள்

மாணவர்களின் தனித்திறன் மற்றும் வாழ்வியல் பாடங்களில் கவனம் செலுத்துதல். கதைகள், பாடல்களுடன் பழமொழி, விடுகதை, போன்றவற்றையும் கற்றுத்தருதல்.

புதிய இணையவழி தமிழ் வகுப்புகள் பற்றி மேலும் அறிய...

தொடரவும்

நேரடி இணையவழி வகுப்புக்கான கட்டண விபரங்கள் பற்றி அறிய...

தொடரவும்